கார வடை (2)
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 200 கிராம்
அரிசி மாவு - 1/2 கிலோ
கடலை மாவு - 1/4 கிலோ
வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
புதினா - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
பட்டை - தேவையான அளவு
கிராம்பு - தேவையான அளவு
தேங்காய்ப் பால் - 1 டம்ளர் அளவு
மிளகாய் தூள் - தேவையான அளவு
நெய் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி (பொடிதாக நறுக்கியது) - ஒரு துண்டு
பூண்டு (பொடிதாக நறுக்கியது) - 5 பல்
காரட் (பொடிதாக நறுக்கியது) - 100 கிராம்
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசிமாவையும் கடலைமாவையும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, காரட் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நறுக்கப்பட்ட இவற்றை எல்லாம் நெய்யில் விட்டு பொன் வறுவலாக வறுக்க வேண்டும்.
தேங்காய் பாலை கொதிக்க வைத்து எடுத்து கொள்ளவும். பொன் வறுவலாக வறுக்கப்பட்டதையும், தேங்காய் பாலையும் ஒன்றாக சேர்த்து இவற்றுடன் மஞ்சள் தூள், சோம்பு தூள், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித் தழை மற்றும் பட்டை, கிராம்பு, மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை பிசைந்து வைத்த மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நன்றாக சூடு வந்தவுடன் அதில் எண்ணெய்யைத் தேய்த்து, அதில் கலந்து வைத்த கலவையை எடுத்து தட்ட வேண்டும்.
நன்றாக பொன்னிறமாக சிவந்தவுடன் வடையை எடுத்து பரிமாறவும்.