கார வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 3/4 கப்

புழுங்கழரிசி - 1/4 கப்

உளுந்து - 1/4 கப்

ஊற வைத்த கடலை பருப்பு - 2 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் - காரத்திற்கேற்ப

சீரகம் - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 இனுக்கு

பூண்டு - 7 பல் (மீடியம் சைஸ்)

தேங்காய் (பல் பல்லாக நறுக்கியது) - 1/2 மூடி

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2

சோடா உப்பு - 2 சிட்டிகை

பஜ்ஜி கலர் பொடி - ஒரு துளி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, உளுந்தை தனித்தனியாக ஊற வைத்து தனியாக அரைக்கவும்.

அரிசியுடன் பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து அரைக்கவும்.

அரைத்த மாவுக்கலவை, ஊறவைத்த கடலை பருப்பு சேர்த்து அதனுடன் உப்பு, பெருங்காயம், மீதியுள்ள கறிவேப்பிலை, வெங்காயம், தேங்காய், சோடா மாவு,கலர் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.

மாவை குழிக்கரண்டியில் எடுத்து காய வைத்த எண்ணையில் போட்டு சிவக்க வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: