கார முறுக்கு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முறுக்கு மாவு - 1 கப்

தனி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் 3/4 கப் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு தேக்கரண்டி உப்பை போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முறுக்கு மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள் மற்றும் சீரகம் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

மிளகாய் தூள், சீரகம் சேர்த்து கலந்து வைத்திருக்கும் முறுக்கு மாவுடன் உப்பு கரைத்த தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பிசைந்துக் கொள்ளவும். மாவு நன்கு மிருதுவாக இருக்க வேண்டும்.

ஒரு தட்டின் பின்புறத்தில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு பிறகு முறுக்கு பிழியும் உரலில் மாவை வைத்து தட்டில் பிழிந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிழிந்து வைத்திருக்கும் முறுக்கை போடவும். ஒரு முறைக்கு 3 அல்லது 4 முறுக்குகள் போடலாம். 2 நிமிடம் கழித்து திருப்பி விடவும். முறுக்கு வெந்ததும், எண்ணெய் அடங்கிய பின்னர் ஒரு நீளமான குச்சியைக் கொண்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: