கார பணியாரம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1/2 கப்

பச்சரிசி மாவு - 2 கப்

துருவிய தேங்காய் - 2 கப்

பச்சை மிளகாய் - 4

பெரிய வெங்காயம் - 1

கொத்துமல்லித் தழை - ஒரு கட்டு

கறிவேப்பிலை - 2 கொத்து

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி மாவு, தேங்காய் துருவல் ஒரு கப், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அதில் கடலை மாவு சேர்த்து மறுபடியும் ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்ததும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதக்கியதை மாவில் கலந்து பணியார சட்டியில் ஊற்றி வெந்ததும் எடுத்துக் பரிமாறவும்.

குறிப்புகள்: