கார பணியாரம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கப்
புழுங்கல் அரிசி - 1/2 கப்
வெந்தயம் - 1/2 மேசைக்கரண்டி
வெள்ளை உளுந்து - 1 மேசைக்கரண்டி + 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் துண்டு - குண்டு மணி அளவு
கடலைப்பருப்பு - 1 1/2 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும். அதை போல வெந்தயம், உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊற வைக்கவும்.
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
அரிசி மற்றும் உளுந்து ஊறியதும் கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்து உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஊற வைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு போட்டு லேசாக சிவக்க விடவும்.
எல்லாவற்றையும் மாவுடன் சேர்த்த பிறகு தாளித்தவற்றையும் மாவுடன் ஊற்றி கரண்டியால் கட்டி இல்லாமல் நன்கு கலக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் பணியார சட்டியை வைத்து குழியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டியால் மாவை எடுத்து குழியில் முக்கால் அளவு ஊற்றவும்.
பிறகு ஒரு தட்டை வைத்து மூடி வைக்கவும். பணியாரத்தின் மேல் புறம் வேகுவதற்காக மூடியை போட்டு 2 நிமிடம் மூடி விடவும்.
2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் ஒரு நிமிடம் கழித்து எடுத்து பரிமாறவும்.