கார அப்பம்
2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 250 கிராம்
துவரம் பருப்பு - 75 கிராம்
உளுத்தம்பருப்பு - 50 கிராம்
சிவப்பு வத்தல் - 7
தேங்காய் (துருவியது) - 1/2 மூடி
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 10
முநதிரி பருப்பு (பொடியாக நறுக்கியது) - 10
சோடா உப்பு - 3 சிட்டிகை
எண்ணைய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி,உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மூன்றையும் 30 நிமிடம் ஊறவைக்கவும்.
இதனுடன் சிவப்பு வத்தல், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கொர கொரப்பாக ஆட்டிக்கொள்ளவும்.
முந்திரி பருப்பை எண்ணையில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
வெங்காயம்,முந்திரி,சோடா மாவு இவற்றை ஆட்டிய மாவில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணையை காய வைத்து காய்ந்தபின் ஆட்டிய மாவை கரண்டியில் எடுத்து ஊற்றி சிவக்க பொரித்து எடுக்கவும். கார அப்பம் ரெடி.