கார்ன் தயிர் வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உரித்த மக்காசோளம் - 100 கிராம்

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 4

  • தயிர் - 1 கப்

    பெருங்காயத் தூள், கடுகு, உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி

    மிளகாய்த்தூள் - சிறிதளவு

    நறுக்கிய கறிவேப்பிலை கொத்த மல்லி - சிறிதளவு,

    எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    சோளத் துடன் இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வடைக்கு அரைப்பது போல் அரைக்கவும்.

    அரைத்த மாவை வடை போல் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    தயிருடன் உப்பு சேர்த்து அடித்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து தயிரில் சேர்க்கவும்.

    வடைகளின் மேலாக தயிரை ஊற்றி மிளகாய்த்தூள், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    குறிப்புகள்: