காரா வடை
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - ஒரு பிடி
மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - பட்டாணி அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியையும் உளுந்தையும் கலந்து சுமார் இரண்டு மணி நேரங்கள் ஊற வைக்கவும்.
பிறகு அதனை நைசாக அரைத்து 8 இல் இருந்து 10 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.
ஒரு பிடி கடலைப்பருப்பை களைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து, அதில் 2 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்து கலக்கவும்.
கடுகு கறிவேப்பிலையைத் தாளித்து சேர்க்கவும். குழிப்பணியாரச் சட்டியில் எண்ணெய் விட்டு சிறிய அப்பங்களாக ஊற்றி, பொரித்து எடுத்து பரிமாறவும்.