காரா பூந்தி (1)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 ஆழாக்கு (200 கிராம்)

கடலை மாவு - 1/2 ஆழாக்கு (100 கிராம்)

சீரகம் - 1 மேசைக்கரண்டி

மிளகு - 1 மேசைக்கரண்டி

நெய் - 50 கிராம்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசிமாவு, கடலைமாவு இரண்டையும் சலிக்கவும்.

மிளகு, சீரகத்தை பொடிக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தேவையான தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பக்குவத்திற்கு, நெய்யையும் உருக்கி சேர்த்து பிசையவும்.

கடாயில் எண்ணெய் சூடானதும் பூந்திக்கரண்டியில் உள்ள துவாரத்தின் வழியாக மாவை எண்ணெயில் விழும்படி தேய்க்கவும்.

சலசலப்பு அடங்கியதும் வேறு சல்லிக்கரண்டியால் அரித்து எடுத்து விட்டு, இதேபோல் எல்லாமாவையும் மறுபடியும் தேய்த்து வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: