காரா பூந்தி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 3 பங்கு

பச்சரிசி மாவு - 1 பங்கு

சோடா மாவு - 3 சிட்டிகை

வெண்ணைய் - 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப

கருவேப்பிலை - 4 இனுக்கு

மஞ்சள் தூள் - 2 சிட்டிகை

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலை மாவு, பச்சரிசி மாவு, சோடா மாவை நன்கு சலிக்கவும்.

அதனுடன் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர், வெண்ணைய் சேர்த்து பிசைந்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.

இதை நிறைய ஓட்டை உள்ள கரண்டியை எடுத்துக் கொண்டு எண்ணைய் சட்டியின் மேல் வைத்து ஒரு குழி கரண்டியால் மாவை கண்கரண்டியில் ஊற்றி தேய்க்க அப்படியே உருண்டை உருண்டையாக பூந்தி எண்ணையில் விழும்.

அதை வெந்த பின் எடுத்து , வேறு வாணாலியில் கொஞ்சமாக எண்ணைய் ஊற்றி வறுத்த கறிவேப்பிலை மற்றும் வத்தல் பொடி சேர்த்த வாணலியில் கொட்டவும்.

கொட்டி நன்கு கலக்க கறிவேப்பிலை, காரம் கலந்த காரா பூந்தி பரிமாறவும்..

குறிப்புகள்: