காராமணி வடை (1)
தேவையான பொருட்கள்:
காராமணிப்பயறு - 1 கப்
பச்சரிசி - ஒரு கைப்பிடி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 3 அல்லது 4 பல்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 3 மேசைக்கரண்டி
முட்டைக்கோஸ் (பொடிதாக நறுக்கியது) - 3 மேசைக்கரண்டி
துருவின காரட் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காராமணிப் பயற்றையும், பச்சரிசியையும் கொதிநீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் எடுத்து இரண்டையும் ஒன்றாய் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீராக அரைத்துவிடாமல், வடை தயாரிக்கும் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், முட்டைகோஸ், காரட் மற்றும் இதர பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவினை சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு, இருபுறமும் வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.