காராமணி பகோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காராமணி - 250 கிராம்

கடலை மாவு - 125 கிராம்

சின்ன வெங்காயம் - 15

பச்சை மிளகாய் - 2

சோம்பு - ஒரு சிட்டிகை

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 4 பல்

கொத்தமல்லித் தழை - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காராமணியை ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பின் அதை சற்று கரகரப்பாக அரைக்க வேண்டும்.

அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித் தழை, சோம்பு, உப்பு, கடலைமாவு சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.

எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி காய வைத்து, காய்ந்த எண்ணெயில் ஒரு மேசைக்கரண்டி எடுத்து மாவுக் கலவையில் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

சிறிது சிறிதாக எண்ணெய் கொள்ளும் அளவு மாவுக் கலவையை கிள்ளிப் போட்டு நன்கு வேக விட்டு எடுத்து சாஸ் உடன் பரிமாறவும்.

குறிப்புகள்: