காரப் போளி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1/2 கிலோ

பால் - 1/4 கிலோ

வெண்ணெய் - 50 கிராம்

தனியா தூள் - 2 கரண்டி

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள் - தேவையான அளவு

உருளைக்கிழங்கு - 100 கிராம்

காரட் - 100 கிராம்

பீன்ஸ் - 50 கிராம்

வெங்காயம் - 100 கிராம்

பச்சைமிளகாய் - 2

கறிவேப்பிலை - தேவையான அளவு

கொத்தமல்லி - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மைதாவில் பால், வெண்ணெய், சோடா உப்பு, உப்பு சேர்த்து பிசைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

வாணலியில் 2 கரண்டி எண்ணெயை ஊற்றி நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.

பிறகு மிளகாய்தூள், மஞ்சள்தூள், மசாலா தூள் சேர்த்து 5 நிமிடம் வேகும் வரை வதக்கவும்.

இதை நன்கு கெட்டியாக வரும் வரை வதக்கி உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

ஊற வைத்துள்ள மாவை சப்பாத்தி போல போட்டு அதில் மசாலாவை வைத்து மூடி பின்னர் ஒரு முறை சப்பாத்தி போல் தேய்த்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் போட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். எடுத்த பின் மேலே நெய் தடவிப் பரிமாறவும்.

குறிப்புகள்: