காரப் போளி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 3 1/2 கப்

டால்டா - 2 மேசைக்கரண்டி

துருவிய காரட் - 1 கப்

முட்டைகோஸ் - 1 கப்

உருளைக்கிழங்கு - 200 கிராம்

பெரிய வெங்காயம் - 2

கடுகு - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 4

இஞ்சி - ஒரு துண்டு

எலுமிச்சம் பழம் - 1/2 மூடி

மிளகாய் வற்றல் பொடி - 1 1/2 தேக்கரண்டி

கரம் மசாலாப் பொடி - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவில், டால்டா, உப்புத் தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து ஊறவைக்கவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி பொடியாக உதிர்த்து பிசைந்து கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழை அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

முட்டைகோஸைப் பொடியாக நறுக்கி வேக வைக்கவும்.

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.

அதில் காரட் துருவல், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, வற்றல் பொடி, மஞ்சள் பொடி, கரம்மசாலாப் பொடி, கொத்தமல்லித் தழை, உப்புத் தூள் சேர்த்து வதக்கவும்.

கடைசியில் எலுமிச்சம்பழச்சாறு பிழிந்து இறக்கி, ஆறியதும் ஒரே அளவான உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

மைதா மாவை எடுத்து அடித்து பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

மாவு உருண்டை ஒன்றை பூரிபலகையின் மீது வைத்து சற்று கனமான பூரியாக இடவும். நடுவில் காய்கறி மசாலா உருண்டையை வைத்து மசாலா வெளியே தெரியாதபடி மூடிவிடவும்.

எண்ணெய் தடவிய வாழை இலையில் மீது வைத்து கை விரல்களாலேயே வட்டமாகத் தட்டவும். இப்படியே எல்லாவற்றையும் தயார் செய்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி கல் காய்ந்ததும், ஒரு போளியைப் போட்டு சுற்றிலும் எண்ணெய் விடவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பில் போட்டு எண்ணெய் விடவும். இருப்புறங்களும் வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

குறிப்புகள்: