காரச்சீடை
தேவையான பொருட்கள்:
அரிசிமாவு - 5 கப்
உளுந்து - 2 கப்
பச்சை மிளகாய் - 20
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
வெண்ணெய் - 1/2 மேசைக்கரண்டி
தேங்காய் - 1/2 மூடி
வெள்ளை எள் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
உளுந்தினை வெறும் வாணலியில் வறுத்து, பொடி செய்து, சலித்து ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
அரிசி மாவினையும் சலித்து கொண்டு, இரண்டையும் ஒன்றாய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அந்த விழுதினை மாவுடன் சேர்த்து, வெண்ணெய் மற்றும் வெள்ளை எள்ளையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வெண்ணெய் அதிகம் சேர்த்தால் சீடை மிருதுவாகிவிடும். அளவோடு இருப்பின் கெட்டியாக இருக்கும்.
இப்போது தேங்காய் பாலினை சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
மாவு கட்டியில்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
பிறகு மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி துணியின் மீது பரப்பி ஈரம் போகும் வரை (சுமார் ஒன்று அல்லது இரண்டு மணிநேரம்) காயவிடவும்.
சீடை உருட்டும் போது பிளவுபடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவிற்கு எண்ணெய் எடுத்துக் கொண்டு, சூடேறியதும் சீடைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
எண்ணெய் சூடேறியதும் தீயைக் குறைத்து, மிதமானத் தீயில் சீடையைப் பொரித்து எடுக்கவும்.