காய்கறி வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுந்து - 2 கப்

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - 2 அங்குல துண்டு

வெங்காயம் - 1

காரட் - 1

சுக்கினி - 1

கீரை - 1/2 கப்

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை 2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் இல்லாமல் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து அரைக்கவும்.

வெங்காயம் மற்றும் கீரையை பொடியாக நறுக்கி அரைத்த மாவில் சேர்க்கவும். காரட் மற்றும் சுக்கினியை துருவி மாவி சேர்த்து வடையாக சுட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: