காய்கறி போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய காய்கறி கலவை - 1/4 கப்

உளுந்து - 1/2 கப்

அரிசி மாவு - 2 கரண்டி

மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி - சிறு துண்டு

கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய்கறி கலவையை ஆவியில் அரை வேக்காடு வேக வைத்து ஆற விடவும். உளுந்தை ஊற வைத்து அதிக தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன் நறுக்கிய இஞ்சி, மிளகு, சீரகம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு, அரிசி மாவு மற்றும் ஆற வைத்துள்ள காய்கறி கலவை சேர்த்து கலந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை உருண்டைகளாகப் போட்டு இருபுறமும் நன்கு சிவக்க விட்டு போண்டாவை பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: