காய்கறி பஜ்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேரட்- 1

பேபி கார்ன் - 3

காலிப்பளவர் (சின்னது) - 1

தக்காளி - 1

கடலை மாவு - 1/4 கிலோ கிராம்

சோடா மாவு - 1 சிட்டிகை

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

சிகப்பு கேசரி கலர் பவுடர் - சிறுது

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கேரட்டை விரல் அளவுக்கு நீட்டமாக மெலிதாக நறுக்கவும்.

காலிப்பளவரை சூடு தண்ணீரில் அலசி பூவை தனியாக எடுத்து வைக்கவும்.

தக்காளியை மெல்லிய வட்டமாக நறுக்கி வைக்கவும்.

பேபி கார்னை நறுக்க வேண்டாம்.

ஒரு கிண்ணத்தில் கடலைமாவு இஞ்சி பூண்டு விழுது, கலர்த்தூள், சோடாமாவு, உப்பு மிளகாய்த்தூள் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவை கலந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் காய வைத்து காய்கறிகளை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் பொறித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: