காய்கறி பக்கோடா
0
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1/4 கிலோ
அரிசி மாவு - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
காரட் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 5
பூண்டு - 50 கிராம்
இஞ்சி - 10 கிராம்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எல்லா காய்கறியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு கடலை மாவுடன், அரிசிமாவையும் கலந்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
எல்லா காய்கறிகளையும் இதனுடன் சேர்த்து கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவினைக் கிள்ளிப் போட்டு நன்றாக பொரித்து எடுத்து பரிமாறவும்.