காய்கறி சமோசா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 100 கிராம்

மைதா மாவு - 1/2 கிலோ

பீன்ஸ் - 100 கிராம்

கேரட் - 100 கிராம்

பச்சை பட்டாணி - 100 கிராம்

வெங்காயம் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 4

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பட்டை - 1

இலவங்கம் - 1

மல்லித்தழை - சிறிது

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை குக்கரில் உப்பு சேர்த்து 2 விசில் வைத்து எடுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, இலவங்கம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதில் காய்களை சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும். மைதா மாவை உப்பு போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

பிறகு பூரி போல் தேய்த்து, தோசைக்கல்லில் இளஞ்சூட்டில் மாவிலுள்ள நீர் வற்றும் வரை இருபுறம் திருப்பி போட்டு எடுத்து இரண்டாக வெட்டி முக்கோணமாக மடித்து உள்ளே காய்கறியை வைத்து மூடி கடாயில் எண்ணெயை ஊற்றி காயவைத்து பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: