காயல் உதிரி பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 200 கிராம்

அரிசி மாவு - 75 கிராம்

பேக்கிங் பவுடர் - 1 1/2 சிட்டிகை

பெரிய வெங்காயம் - 2

மசாலா தூள் - 1 தேக்கரண்டி

முந்திரிப்பருப்பு - 50 கிராம்

பச்சை மிளகாய் - 4

கறிவேப்பிலை - 3 கொத்து

தண்ணீர் - 5 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கறிவேப்பிலை, பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயத்தை நீளமாக நறுக்கிக்கொள்ளவும். கடலைமாவை சலித்துக் கொள்ளவும்.

சலித்த மாவோடு முந்திரிப்பருப்பு, பேக்கிங் பவுடர், வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

10 நிமிடம் வைத்தால் வெங்காயத்தில் உள்ள நீர் வெளிவரும்.

அதனால் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை காயவைக்கவும்.

பின் கொஞ்சம் எடுத்து சிறுசிறுத் துண்டுகளாக பிசைந்து போடவும். நன்கு சிவந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: