காபுலி சாட்
தேவையான பொருட்கள்:
சன்னா - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - தேவைக்கு
சாட் மசாலா - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
பச்சை சட்னி - 3 தேக்கரண்டி
இனிப்பு சட்னி - 3 தேக்கரண்டி
சேவ் - சிறிது
மாதுளை முத்துக்கள் - 2 தேக்கரண்டி (விரும்பினால்)
பப்படி - 5
பப்படி செய்ய:
மைதா மாவு - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
ஓமம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
மைதா மாவை ஓமம், உப்பு கலந்து தேவையான நீர் விட்டு பிசைந்து வைக்கவும்.
இவற்றை திரட்டி சின்ன சின்ன வட்ட வடிவங்களாக வெட்டி அவற்றை ஃபோர்க் கொண்டு குத்தி விடவும். அப்போது தான் பூரி போல் எழும்பாது.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இவற்றை போட்டு பொரித்து எடுக்கவும். சாட் வகைகளுக்கு தேவையான பப்படி தயார்.
இனிப்பு மற்றும் பச்சை சட்னி தயார் செய்து எடுத்து வைக்கவும்.
சன்னாவை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். இதில் மிளகாய் தூள், சாட் மசாலா கலந்து வைக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தோல் நீக்கி நறுக்கிய தக்காளி அவற்றுக்கு தேவையான உப்பு சேர்க்கவும்.
இதில் சட்னி வகை இரண்டும் கலந்து விடவும்.
இரண்டு பப்பட் மட்டும் பொடியாக உடைத்து போட்டு கலந்து விடவும்.
இதை பரிமாற போகும் கப்பில் போட்டு மேலே இன்னும் கொஞ்சம் பப்பட் உடைத்து போட்டு கொத்தமல்லி தூவவும்.
இதன் மேல் சேவ் மற்றும் மாதுளை முத்துக்கள் தூவினால் சுவையான காபுலி சாட் தயார்.
குறிப்புகள்:
பச்சை சட்னி செய்ய: ஒரு பிடி கொத்தமல்லி இலை, ஒரு பிடி புதினா இலை, ஒரு பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். இதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும். விரும்பினால் ஒரு தேக்கரண்டி தயிரும் கலந்து கொள்ளவும்.