கல்கண்டு வடை
0
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1 டம்ளர்
கல்கண்டு தூள் - 1 டம்ளர்
ஏலக்காய் - 2
வாழைப்பழம் - 1
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுத்தம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பின் தண்ணீர் சேர்க்காமல், கல்கண்டு தூள், ஏலக்காய், உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
பிசைந்த வாழைப்பழத்தை மாவுடன் சேர்த்து கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின் மாவை சிறு சிறு வடைகளாக தட்டி, பொரித்து எடுத்து பரிமாறவும்.