கறி வடை (2)
தேவையான பொருட்கள்:
மட்டன் அல்லது பீஃப் (எலும்பு நீக்கியது) - 1/4 கிலோ
தேங்காய் (அரைத்தது) - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 3
மல்லிக்கீரை - 1/2 கட்டு
மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
முட்டை - 1
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் எலும்பு நீக்கிய கறியை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், அரைத்த தேங்காய், உப்பு, மசாலாத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, நைசாக நறுக்கிய மல்லிக்கீரை, கலக்கிய முட்டை அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து, வடை போன்று தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு தட்டிய வடைகளைப் போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.