கறி வடை (1)
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/4 கிலோ
வெங்காயம் - பாதி
கடலை பருப்பு - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
மசாலா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் துள் - சிறிது
முட்டை - 1
கருவேப்பிலை - சிறிது
தயிர் - 1 தேக்கரண்டி
இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கறியை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் மசாலாதூள்,உப்பு,மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு விழுது,தயிர் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து எடுக்கவும்.
கடலை பருப்பை தனியாக வேகவைத்து எடுக்கவும்.
பின் வேகவைத்த கறியையும்,பருப்பையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின் அரைத்ததில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் ,முட்டை ,கருவேப்பிலை ,உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வடை போல தட்டி எண்ணெய்யை சூடாக்கி பொறித்து எடுத்து பரிமாறவும்.