கறி வடை
தேவையான பொருட்கள்:
கறியின் சதை பகுதி (எலும்பு நீக்கியது) - 1/4 கிலோ
கடலை மாவு - 1/4 கிலோ
அரிசி மாவு - 50 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலத்தூள் - 1 தேக்கரண்டி
சிகப்பு கலர் - கொஞ்சம்
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலைமாவை சலித்துக் கொள்ளவும்.
அரிசிமாவு,கடலைமாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், நெய், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மாவை கலந்து வைக்கவும்..
குக்கரில் சிறு துண்டுகளாக நறுக்கிய கறி, இஞ்சி பூண்டுவிழுது, மிளகாய்த்தூள், உப்பு கரம் மசாலாத்தூள், கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 4வீசில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
தண்ணீர் இருக்க கூடாது
வாணலியில் எண்ணெய் காய்ந்த பின்பு கறி துண்டுகளை மாவில் முக்கி எண்ணெயில் பொறித்து எடுத்து பரிமாறவும்..