கர்நாடகா வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்

பச்சை மிளகாய் - 3

மிளகு - 1 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை - சிறிய கட்டு

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தினை சுமார் 6 மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.

பிறகு நீரினை வடித்து விட்டு, மிளகுடன் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.

கொத்தமல்லித் தழையையும், பச்சைமிளகாயையும் நறுக்கி மாவுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, வடை சுடுவதற்கு தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு, சூடேறியதும், மாவினை வடைகளாகத் தட்டிப் போடவும்.

தீயை மிதமாக வைத்துக் கொள்ளவும். வடை பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: