கருனைக்கிழங்கு வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கருணைக்கிழங்கு - 1/4 கிலோ

பச்சைமிளகாய் - 1

கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி

வெங்காயம் (பொடியாக அரிந்தது) - ஒன்று

தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி

கொத்தமல்லித்தழை - சிறிது

மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி

சோம்பு தூள் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி துருவல் - 1/4 தேக்கரண்டி

மைதா, சோளமாவு, அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

பொட்டுக்கடலை மாவு - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கருணைக்கிழங்கை தோலெடுத்து மண்ணில்லாமல் கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி கால் தேக்கரண்டி உப்பு போட்டு வேகவைத்து ஆறியது தண்ணீரை வடித்து மசித்து கொள்ள வேண்டும்.

சோம்பு தூள், பச்சைமிளகாய், தேங்காய் துருவல், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவேன்டும்.

மசித்த கிழங்கில் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், அரைத்த விழுது, வெங்காயம், மைதா, சோள மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு என அனைத்தையும் போட்டு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.

தோசை தவாவில் எண்ணெயை ஊற்றி வடைகளாக தட்டி பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: