கரம் பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்

கடலை மாவு - 2 கப்

வெங்காயம் (நீளவாக்கில் மெல்லியதாக அரிந்தது) - 4

பச்சை மிளகாய் (பொடியாக அரிந்தது) -10

சிதைத்த இஞ்சி - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

சோடா உப்பு - 2 சிட்டிகை

டால்டா - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

சோடா உப்பை டால்டாவில் போட்டு நன்கு அடித்துக் கொள்லவும்.

மாவுகளை சலித்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, உப்பு, டால்டா கலவை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீரைத்தெளித்து கெட்டியாக பிசையவும்.

மிதமான சூட்டில், சூடான எண்ணெயில் சிறிது சிறிதாகப் போட்டு சிவந்ததும் எடுத்து வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: