கத்திரி தயிர்வடை
0
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 100 கிராம்
கடலைப்பருப்பு - 150 கிராம்
முளைகட்டிய பாசிப்பயறு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 6
தயிர் - 1 கப்
பெருங்காயத்தூள் - சிறிது
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பையும், பாசிப்பயறையும் அரைமணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.
கத்திரிக்காயை நன்கு கழுவி, துண்டுகளாக நறுக்கி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அதனை பருப்பு விழுதுடன் சேர்க்கவும். பிறகு, அந்த மாவுடன் பெருங்காயத்தூள், உப்பு, தயிர் சேர்த்து கலக்கி, வடையாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.