கத்திரிக்காய் பஜ்ஜி
3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பஜ்ஜி மாவு - 1 கப்
சிறிய கத்திரிக்காய் - 6
வெங்காயம் - 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
காரப் பொடி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பஜ்ஜி மாவை தேவையான தண்ணீரில் தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
கத்திரிக்காயை காம்பை விட்டு விட்டு நீளவாக்கில் 4 ஆக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கின கத்தரிக்காயை சிறிது உப்பு போட்ட தண்ணீரில் 2 நிமிடம் வேக விடவும். பின் நீரை வடித்து விட்டு வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட், காரப்பொடி, வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
இந்த விழுதை வேக வைத்த கத்திரிக்காய் உள்ளே வைத்து பஜ்ஜி மாவு கரைசலில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.