கதம்ப போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 100 கிராம்

கடலைமாவு - 150 கிராம்

கேரட் - 2

உருளைக்கிழங்கு - 1

பச்சை பட்டாணி (வேகவைத்தது) - ஒரு கைப்பிடி

வெங்காயம் - 1

பச்சைமிளகாய் - 1

முட்டை - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

பெருங்காயத்தூள் - 1 மேசைக்கரண்டி

சோடா உப்பு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கேரட், உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்

மாவுடன் மிளகாய்தூள், பெருங்காயத்தூள், சோடா உப்பு, இஞ்சி பூண்டு விழுது, முட்டை, உப்பு போட்டு கட்டியில்லாமல் கலக்கி அரைமணி நேரம் வைக்கவும்.

பின் அதில் நறுக்கி வைத்த காய்களை போட்டு கலக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து அதில் ஊற்றி சிவந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

இதே போல் எல்லாவற்றையும் பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: