கணவா பஜ்ஜி
0
தேவையான பொருட்கள்:
கணவா - 5
கடலைமாவு - 3/4 கப்
மைஸ் மாவு - 2 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு, சோம்பு விழுது - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சோடா உப்பு - ஒரு பின்ச்
சிவப்பு கலர் - ஒரு பின்ச்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கணவாவை சுத்தம் செய்து சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் போட்டு 3 அல்லது 4 விசில் வைத்து வேக வைத்து, நீரை வடித்துக் கொள்ளவும்.
பின்பு மூன்று மாவுகள், இஞ்சி பூண்டு சோம்பு விழுது, மிளகாய் தூள், சோடா உப்பு, சிவப்பு கலர், தேவையான அளவு உப்பு, நீர் சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்
பின்பு வேக வைத்த கணவாவை கரைத்த கலவையில் 5 நிமிடம் ஊற விடவும்.
எண்ணெயை சூடாக்கி தீயை மிதமாக வைத்து ஊற வைத்த கணவாவை போட்டு சிவக்க வேக விட்டு எடுக்கவும்.