கட்லெட்
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
சோளமாவு - 1/2 கப்
பொரிகடலை மாவு - 1/2 கப்
துருவிய கேரட் - 2 கப்
பீன்ஸ் (பொடியாக நறுக்கியது) - 100 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 6
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
வேகவைத்த உருளைக்கிழங்கு - 3
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
ரஸ்க் தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
அதனுட்ன் மிளகாய்பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் போட்டு கிளறிய பின் பொடியாக கிள்ளிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.
ஆறிய பின் சோளமாவு, பொரிகடலைமாவு சேர்த்து பிசைந்து கட்லெட் வடிவில் தட்டி, மைதாவை கரைத்து கட்லெட்டை முக்கி எடுத்து ரஸ்கில் பிரட்டவும்.
பிறகு தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவைத்து, திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்.