கடலை பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறிய தேங்காய் - 1

பொட்டுக்கடலை - 250 கிராம்

சர்க்கரை - 150 கிராம்

முந்திரி - 50 கிராம்

மைதா மாவு - 200 கிராம்

ஏலக்காய்தூள் - 1 மேசைக்கரண்டி

நெய் - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காயை முக்கால் பகுதி துருவிக்கொண்டு கால்பகுதி பால் எடுக்கவும்

பொட்டுக்கடலையை ஒன்றிரண்டாக பொடிக்கவும்.

சீனியை தூளாக்கவும்

முந்திரியை நெய்யில் வறுத்து பொடிபொடியாக நறுக்கவும்.

மைதாவில் தேங்காய்ப்பால், உப்பு ஒரு மேசைக்கரண்டி சீனி சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.

தேங்காய் துருவலுடன் பொட்டுக்கடலை, முந்திரி, சீனி, ஏலக்காய்தூள் எல்லாம் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்

ஒரு மணிநேரம் கழித்து உருண்டைகள் பிடித்து மைதாவில் நனைத்து பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: