கடலைமாவு போண்டா
0
தேவையான பொருட்கள்:
கடலைமாவு - 100 கிராம்
அரிசிமாவு - 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 4 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுந்தை 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்துகொள்ளவும். அரைத்த உளுந்துடன் அரிசிமாவு, கடலைமாவு, உப்பு சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கரைக்கவும்.
4 மணி நேரம் ஊறிய பிறகு கடுகு தாளித்து கொட்டி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், கடலைப்பருப்பை ஊறவைத்து பிழிந்து போட்டு கரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கரண்டியால் மாவை மொண்டு ஊற்றி மிதமான தீயில் வேக விட்டு எடுத்து பரிமாறவும்.