ஓம முறுக்கு
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 1/2 கப்
மைதா மாவு - 1/2 கப்
ஓம பவுடர் - 4 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
எள்ளு - 3 மேசைக்கரண்டி
தேங்காய்ப்பால் - 1 கப்
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மைதாமாவை ஆவியில் 10 - 15 நிமிடங்கள் அவித்து அரித்து ஆறவிடவும். அவித்த மைதா மாவுடன், கடலைமாவு, ஓமம், மிளகாய்த்தூள், உப்பு, சேர்க்கவும். அத்துடன் வெள்ளை எள்ளுவையும் சேர்த்து ஒன்றாக கலக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பாலை ஊற்றி சிறிது நேரம் காய்ச்சவும்.
காய்ச்சின தேங்காய்ப்பாலை கலந்து வைத்துள்ள மாவில் சிறிது சிறிதாக விட்டு குழைக்கவும். தேங்காய்ப்பால் போதவில்லையாயின் சிறிது சுடுதண்ணீரும் சேர்க்கலாம். மாவை முறுக்கு பிழியும் பதத்திற்கு (சற்று கெட்டியாக) பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை முறுக்கு உரலினுள் போட்டு நட்சத்திர அச்சு வழியாக முறுக்குகளாக பிழிந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கொதிக்கவிட்டு, அதில் பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை போடவும். முறுக்கு சற்று சிவக்க வெந்தவுடன் எண்ணெய்யில் இருந்து அரித்து எடுத்து எண்ணெய் வடியவிட்டு பரிமாறவும்.