ஓட்ஸ் வடை
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
உருட்டு உளுந்து - 1 கப்
ஓட்ஸ் - 1 கப்
மிளகுதூள் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிது
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஓட்ஸை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.
உளுந்தை ஒரு மணி நேரம் ஊற விட்டு மைய அரைத்து எடுக்கவும். அதனுடன் வறுத்த ஓட்ஸ், கறிவேப்பிலை, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வடை மாவை தட்டி போடவும்.
வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக எடுத்து பரிமாறவும்.