ஓட்ஸ் பஜ்ஜி
0
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1/2 கப்
கடலை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
முட்டை - 1
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய குடைமிளகாய் - சிறிது
சீரகம் - சிறிது
பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் (எண்ணெய் தவிர) ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து 15 நிமிடம் ஊற விடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பஜ்ஜிகளாக பொரித்து எடுத்து பரிமாறவும்.