ஒரிஜினல் மசால் வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டாணிப்பருப்பு - 1/4 கிலோ

சின்ன வெங்காயம் - 150 கிராம்

பச்சைமிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிது

மல்லித்தழை - சிறிது

பட்டை - 1 சிறிய துண்டு

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1/4 தேக்கரண்டி

சோம்பு - 1/4 தேக்கரண்டி

பூண்டு - 5 பற்கள்

இஞ்சி - 1 துண்டு

மிளகாய் வற்றல் - 6

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வடை சுடுவதற்கு 1 மணி நேரம் முன் பருப்பை ஊறப்போடவும். 1 மணி நேரம் ஊறிய பருப்பை வடிதட்டில் கொட்டவும்.

நன்கு நீர் வடிந்திருக்க வேண்டும். சற்று உலர்ந்த தன்மை வரும் வரை வடிதட்டில் போடவும்.

வெங்காயம், பச்சைமிளகாய், மல்லி, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

பட்டை, சீரகம், மிளகு, சோம்பு, பூண்டு, இஞ்சி, மிளகாய்வற்றல், உப்பு அனைத்தையும் மிக்ஸியில் பொடிக்கவும்.

இதனை நறுக்கி வைத்த வெங்காயத்தில் நன்கு பிசைந்து கொள்ளவும்.

பட்டாணிப்பருப்பை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து அனைத்தையும் நன்கு கலந்து வடைகளாக தட்டி எண்ணெயில் மொறு மொறுப்பாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: