எள் தட்டைமுறுக்கு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 2 கப்

கடலை மாவு - 2 கப்

அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

ரவை - 1 மேசைக்கரண்டி

எள் - 3 மேசைக்கரண்டி

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

வரமிளகாய் - 3

கறிவேப்பிலை - 5 இதழ்

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கறிவேப்பிலை மற்றும் வரமிளகாயை மிக்ஸியில் அரைத்து ஃப்லேக்ஸாக மாற்றவும்.

பின் அரைத்தவற்றை மேலே கூறிய பொருட்களுடன் போட்டு நன்றாக கலக்கிக் கொள்ளவும்.

பின் கலவையில் 4 மேசைகரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாக பிசைந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும். கையில் ஒட்டாதவாறு இருக்க வேண்டும்.

20 நிமிடம் கழித்து ஒரு பெரிய உருண்டை எடுத்து நன்றாக மெல்லியதாக தேய்க்கவும். ஃபோர்க்கால் ஆங்காங்கே குத்தி விடவும். இதனால் உப்பி வருவதை தடுக்கலாம்.

வேண்டிய வடிவத்தில் வெட்டி, எண்ணெயை நன்றாக காய விட்டு அதில் போட்டு நன்கு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: