உளுந்த வடை (5)
0
தேவையான பொருட்கள்:
உளுந்து (30 நிமிடம் ஊறவைத்து அரைக்கவும்) - 1 கப்
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 3/4 கப்
சீரகம் - 3/4 தேக்கரண்டி
சோடா மாவு - 3 சிட்டிகை
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 4
கறிவேப்பிலை (மிகவும் பொடியாக நறுக்கியது) - 1 இனுக்கு
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுந்த மாவில் வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், கறிவேப்பிலை, உப்பு, சோடா மாவு சேர்த்து நன்கு கலந்து மொரு மொரு வென இருக்க 1 தேக்கரண்டி பச்சரிசி மாவு சேர்த்து நன்கு பிசைந்து வட்டமாக தட்டி நடுவில் ஓட்டை போட்டு வாணலியில் காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.