உளுந்து வடை (7)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுந்து - 2 ஆழாக்கு

கடலை பருப்பு - 1/2 ஆழாக்கு

பச்சை மிளகாய் - 5

கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடியளவு

இஞ்சி - சிறிது

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தையும், கடலைப்பருப்பையும் 2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து விட்டு உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த பருப்புடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கொத்தமல்லி இழை, இஞ்சி ஆகியவற்றை பிசறி கடாயில் எண்ணெய் விட்டு வடைகளாக தட்டி இருபுறமும் வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: