உளுந்து வடை (6)
0
தேவையான பொருட்கள்:
உளுந்து - 2 ஆழாக்கு
துவரம் பருப்பு - 1/2 ஆழாக்கு
பச்சைமிளகாய் - 4
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுந்தையும், துவரம்பருப்பையும் 2 மணி நேரம் ஊறவைத்து, ஊறியதும் தண்ணீரை வடிகட்டியில் வடித்துவிடவும்.
பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை பருப்புடன் தண்ணீரை சிறிது, சிறிதாக தெளித்து வெண்ணெய் போல் அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கி கனமான கவரில் வடைகளாக தட்டி நடுவில் ஓட்டை போட்டு 4 வடைகளாக பொரித்து எடுத்து பரிமாறவும்.