உளுந்து வடை (4)
தேவையான பொருட்கள்:
உளுந்து - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு
கொத்தமல்லி - ஒரு கொத்து
கேரட் துருவல் - 1/4 கப்
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டை சற்று தடிமனாக துருவிக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்யவும்.
உளுந்தை சுமார் 2 மணிநேரம் ஊற வைத்து, கழுவி சுத்தம் செய்து அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அரைத்த மாவுடன் நறுக்கின வெங்காயம், கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு பிளாஷ்டிக் கவரில் அல்லது வாழை இலையில் எலுமிச்சை அளவு மாவு எடுத்து வட்டமாக தட்டி நடுவில் ஓட்டையிட்டு எண்ணெயில் போட்டு வேகவிடவும்.
வடை பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து எண்ணெய்யை வடியவிடவும். வடை வெந்தவுடன் அதை சுற்றி கொதித்தாற்போல் நுரை வருவது குறைந்துவிடும். இதனை வைத்து வடை வெந்ததை அறியலாம்.