உளுந்து வடை (3)
0
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 2 டம்ளர்
பச்சரிசி - 1 தேக்கரண்டி
ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறிது
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுத்தம் பருப்பு, பச்சரிசி, ஜவ்வரிசி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்தவற்றுடன் சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, பெருங்காயம், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.