உளுந்து வடை (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரைக்க:

உளுத்தம் பருப்பு - 1 கப்

எண்ணெய் - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - ஒரு பின்ச்

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

உளுந்து மாவில் கலக்க:

ஆப்ப சோடா - ஒரு பின்ச்

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1

பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1

கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - ஒரு கொத்து

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிக்ஸியில் ஒரு தேக்கரண்டி தண்ணீரில் பெருங்காயத்தை கரைத்து அத்துடன் எண்ணெய், இஞ்சி சேர்த்து அரைத்தெடுக்கவும். எண்ணெய் ஊற்றி அரைப்பதால் மிக்ஸியில் அதிகம் ஒட்டாது.

அரைத்து வழித்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு வடை மாவில் கலக்க வேண்டிய பொருட்களை போட்டு கலக்கி வைக்கவும்.

ஒரு இரும்பு வாணலியில் எண்ணெயை சூடாக்கி கையை நல்ல கழுவி கொண்டு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்து கொண்டு கையை நனைத்து விட்டு மாவை எடுத்தால் ஒட்டாமல் வரும். அப்படியே கட்டை விரலால் நடுவில் ஒரு ஓட்டை போட்டு எண்ணெயில் ஒவ்வொன்றாக பொரித்து எடுத்து பரிமாறவும்..

குறிப்புகள்: