உளுந்து முறுக்கு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுந்து - 1 கப்

அரிசி மாவு - 2 1/2 கப்

வெண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி

எள் - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

ஓமம் - 1/2 தேக்கரண்டி

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை கழுவி ஒன்றிற்கு மூன்று கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து, ஆற விட்டு மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.

அரைத்த உளுந்து மாவுடன், அரிசி மாவு, வெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

பிறகு எள், சீரகம், ஓமம் சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. உளுந்தின் ஈரப்பதமே போதுமானது.

பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழியவும்.

பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிழிந்த முறுக்கை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

அரை லிட்டர் எண்ணெய்க்கு, ஒரே நேரத்தில் 3-4 முறுக்குகள் வரை பிழிந்து விடலாம்.