உளுந்து போண்டா
தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு - 2 கோப்பை
பச்சைமிளகாய் - 4
மிளகு - 1 தேக்கரண்டி
தேங்காய் - இரண்டு பத்தை
கறிவேப்பிலை - ஒரு கொத்து
ஆப்பசோடா - ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுத்தம்பருப்பை கழுவி சுடுதண்ணீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பச்சைமிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஊறிய பருப்பை நீரை வடித்து விட்டு உப்பை சேர்த்து கரகரப்பாக அரைத்து பெருங்காயம், ஆப்பசோடாவைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதனுடன் குருமிளகு, மற்றும் பொடியாக நறுக்கிய பொருட்களைப் போட்டு நன்கு கலக்கி வைக்கவும்.
பிறகு சட்டியில் எண்ணெயை ஊற்றி நன்கு காயவைத்து கரண்டியின் உதவியால் மாவு கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.