உளுத்தம் பருப்பு தட்டை வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம்பருப்பு - 1 கப்

மிளகு - 5

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் தூள் - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் உளுத்தம் பருப்பினை 2 – 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறவைத்துள்ள உளுந்தினை தண்ணீர் நன்றாக வடித்து நன்றாக கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.(உளுந்தினை ஒன்றும் பாதியுமாக அரைக்க வேண்டும். அரைத்த மாவில் உளுந்து தென்படவேண்டும். இதற்கு நீங்கள் மிக்ஸியில் 2 நிமிடம் அரைத்தால் போதும்.)

மிளகு மற்றும் சீரகத்தினை தனியாக அரைத்து கொள்ளவும். (உளுந்துடன் போட்டால் நன்றாக பொடிக்கமுடியாது.)

கொரகொரப்பாக அரைத்துள்ள உளுந்துடன் பொடித்து வைத்துள்ள பொருட்கள், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து இதனை தட்டைகள் போல மிகவும் மெல்லியதாக தட்டி கொண்டு எண்ணெயில் போட்டு நன்றாக க்ரிஸ்பியான பிறகு எடுத்து பரிமாறவும்..

குறிப்புகள்: